தொழில்நுட்பம்
சூப்பர் மேரியோ 64

ரூ. 11 கோடிக்கு ஏலம் போன சூப்பர் மேரியோ கேம்

Published On 2021-07-13 10:08 GMT   |   Update On 2021-07-13 14:33 GMT
சூப்பர் மேரியோ 64 கேம் கன்சோல் அமெரிக்காவை சேர்ந்த ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் ஏலம் விடப்பட்டது.


அமெரிக்காவை சேர்ந்த ஏல நிறுவனமான ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ், திறக்கப்படாத நிலையில் இருந்த சூப்பர் மேரியோ 64 கேமினை ஏலத்தில் விற்பனை செய்துள்ளது. இந்த சூப்பர் மேரியோ 64 கேமினை ஒருவர் 15.6 லட்சம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 11,62,00,500 கொடுத்து வாங்கி உள்ளார். 

திறக்கப்படாத நிலையில் இருந்ததால், இந்த கேம் சேகரிக்கும் பொருளாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் நின்டென்டோவின் பல கேம்களுக்கு ஏல விற்பனையில் நல்ல விலை கிடைத்து இருக்கிறது. நின்டென்டோ கேம்களான லெஜண்ட் ஆப் செல்டா, பைனல் பேண்டஸி 3 மற்றும் சூப்பர் மேரியோ ப்ரோஸ் போன்றவை முந்தைய விற்பனைகளில் கணிசமான தொகைக்கு விற்கப்பட்டுள்ளன.



ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட கன்சோல் உற்பத்தி ஆலையில் இருந்து வெளியான சமயத்தில் இருந்த நிலையிலேயே தற்போதும் இருக்கிறது. என்64 கன்சோல் நின்டென்டோ நிறுவனத்திற்கு பெரும் வெற்றிகரமான ஒன்றாக அமைந்தது. இது பல லட்சம் கேமர்களை கவர்ந்த கன்சோல் ஆகும். 

முன்னதாக லெஜண்ட் ஆப் செல்டா கேமினை ஒருவர் 8,70,000 டாலர்கள் கொடுத்து வாங்கி இருந்தார். இதுவே, அதிக தொகைக்கு விற்பனையான கேமாக இருந்து வந்தது. இதற்கு முன் சூப்பர் மேரியோ ப்ரோஸ் கேம் 6,60,000 டாலர்களுக்கு விற்பனையானது அதிகபட்ச தொகையாக இருந்தது.

திறக்கப்படாத நிலையில் இருக்கும் சூப்பர் மேரியோ 64 கேமினை இத்தனை கோடிகளுக்கு வாங்கியவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.  
Tags:    

Similar News