செய்திகள்
விஜய் வசந்த்

மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட 4 பேருக்கு சபாநாயகர் பதவிப் பிரமாணம்

Published On 2021-07-19 08:12 GMT   |   Update On 2021-07-19 08:12 GMT
மறைந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:

டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் தொடங்கி நடைபெற்று பெற்றது.

மக்களவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட 4 பேருக்கு சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதனிடையே மாநிலங்களவை பிற்பகல் 12.24 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மறைந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டது.
Tags:    

Similar News