செய்திகள்
பெட்ரோல், டீசல்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Published On 2020-11-20 02:18 GMT   |   Update On 2020-11-20 02:18 GMT
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 84.31 ரூபாய், டீசல் லிட்டருக்கு 76.17 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
சென்னை:

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், பெட்ரோல் விலை 59 நாட்களுக்கு பின் லிட்டருக்கு 17 காசுகள் அதிகரித்து, ரூ.84.31-க்கும்,  டீசல் விலை 49வது நாட்களுக்கு பின் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.76.17 ஆகவும் விற்பனையாகிறது.
Tags:    

Similar News