ஆட்டோமொபைல்
2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் ஃபேஸ்லிஃப்ட்

2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2020-02-21 10:22 GMT   |   Update On 2020-02-21 10:22 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் ஃபேஸ்லிஃப்ட் கார் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் மார்ச் 3-ம் தேதி வெளியாகிறது. சர்வதேச சந்தையில் இந்த கார் 2019 ஜெனிவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஜி.எல்.சி. கூப் மாடலில் பல்வேறு காஸ்மெடிக் அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளது. கூப் எஸ்.யு.வி. மாடலில் மேம்பட்ட பவர்டிரெயின் வழங்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில் புதிய காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுறது. இது பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.



இந்தியாவில் ஜி.எல்.சி. கூப் மாடல் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். முன்னதாக இந்த காரின் ஏ.எம்.ஜி. வெர்ஷன் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டன. சர்வதேச சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. கூப் ஃபேஸ்லிஃப்ட் 2 பெட்ரோல் மற்றும் 3 டீசல் மோட்டார் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

இதன் 200 4மேடிக் என்ஜின் 197 பி.ஹெச்.பி. பவர், 320 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 300 4மேடிக் என்ஜின் 258 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் மோட்டார் 163 பி.ஹெச்.பி. முதல் 245 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. 

கூப் எஸ்.யு.வி. மாடலில் டைமண்ட் பேட்டன் கிரில், ஃபிளான்க்டு மேம்பட்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், மேம்பட்ட முன்புற பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. பின்பறம் புதிய டிஃப்யூஸர், ஆங்குலர் எக்சாஸ்ட் டிப், புதிய வடிவமைப்பு கொண்ட எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News