ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலித்த காட்சி.

திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் தெய்வானையுடன் முருகப்பெருமான் உலா

Published On 2021-09-27 08:42 GMT   |   Update On 2021-09-27 08:42 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை சுற்றி வலம் வந்தார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை அன்று தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க நகர் வீதிகளில் உலா வருவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் கடந்த 1½ வருடங்களுக்கு மேலாக வீதி உலா தவிர்க்கப்பட்டு உள்ளது

இதே சமயம் அரசு நெறிமுறைக்கு உட்பட்டு சில தளர்வால் பக்தர்கள் அனுமதி இன்றி கோவிலுக்குள் சுவாமி உலா நடைபெற்று வந்தது. இதற்கிடையே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவில் மூடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சனிக்கிழமையான நேற்று புரட்டாசி மாத கார்த்திகையையொட்டி கோவிலுக்குள் நேற்று மாலை சுப்பிரமணியசுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், சர்வ அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை சுற்றி வலம் வந்தார். இந்தநிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதி தவிர்க்கப்பட்டது.
Tags:    

Similar News