செய்திகள்
உண்டியல் பணம் எண்ணப்பட்ட போது எடுத்த படம்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.92 லட்சம்

Published On 2020-09-29 04:16 GMT   |   Update On 2020-09-29 04:16 GMT
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.91 லட்சத்து 95 ஆயிரத்து 48 ரொக்கமும், 2 கிலோ 477 கிராம் தங்கமும், 2 கிலோ 880 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 31-ம் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சமயபுரம்:

அம்மன் தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் செலுத்தும் காணிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் மாதம் 2 முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த மாதம் 2-வது முறையாக கோவில் இணை ஆணையர் அசோக்குமார், திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஞானசேகரன், திருவானைக்கோவில் உதவி ஆணையர் மாரியப்பன், கோவில் மேலாளர் லட்சுமணன், மண்ணச்சநல்லூர் பகுதி கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, கோவில் கண்காணிப்பாளர்கள் நரசிம்மன், சாந்தி ஆகியோர் முன்னிலையில் நேற்று திறந்து எண்ணப்பட்டன.

அப்போது ரூ.91 லட்சத்து 95 ஆயிரத்து 48 ரொக்கமும், 2 கிலோ 477 கிராம் தங்கமும், 2 கிலோ 880 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 31-ம் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News