செய்திகள்
கோட்டையூர் பகுதியில் விற்பனைக்கு வந்துள்ள மண்பானைகளை படத்தில் காணலாம்.

காரைக்குடி பகுதியில் மண் பானைகள் விற்பனை மும்முரம்

Published On 2021-05-09 16:37 GMT   |   Update On 2021-05-09 16:37 GMT
அக்னி நட்சத்திர வெயில் தாக்கத்தை தொடர்ந்து காரைக்குடி பகுதியில் விற்பனைக்காக மண் பானைகள் வந்து குவிந்துள்ளன.
காரைக்குடி:

அக்னி நட்சத்திர கத்தரி வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் வீட்டிற்குள் முடங்கி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வெயில் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் அக்னி நட்சத்திர கத்தரி வெயில் தாக்கம் உக்கிரமாக உள்ளது.

இதையடுத்து சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஆங்காங்கே தர்பூசணி பழக்கடை, சர்பத் கடை, இளநீர் கடை உள்ளிட்ட குளிர்ச்சியை தரும் பானங்கள் விற்பனை சாலையோரங்களில் நடந்து வருகிறது. இதுதவிர கோடைக்காலத்தில் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் குளுமையான நிலையில் தண்ணீர் குடிப்பதற்காக தற்போது காரைக்குடி பகுதியில் மண் பானைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக மண்பாண்ட தொழில் நகரமாக விளங்கி வரும் மானாமதுரை பகுதியில் இருந்து தற்போது காரைக்குடி, கோட்டையூர், பள்ளத்தூர், புதுவயல் உள்ளிட்ட பகுதியில் மண் பானைகள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. இந்த பானை ரூ.100 முதல் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர வீடுகளில் தண்ணீர் ஊற்றி வைக்க பயன்படுத்தப்படும் மண் ஜாடிகளும் விற்பனைக்காக வந்து உள்ளது. ஊரடங்கை தொடர்ந்து காரைக்குடி பகுதியில் மண் பானைகளின் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
Tags:    

Similar News