ஆன்மிகம்
முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர ஆரத்தி வழிபாடு நடந்த போது எடுத்த படம்.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர ஆரத்தி

Published On 2021-10-21 04:00 GMT   |   Update On 2021-10-21 04:00 GMT
சப்த கன்னிகள் பூஜையை தொடர்ந்து 27 சுமங்கலிகள் அகல் தீபத்துடன் நெய்தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான சமுத்திர அபிஷேகமும், சமுத்திரத்தை நோக்கி ஆரத்தி வழிபாடும் நடந்தது.
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டா் பேரவை சார்பில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆரத்தி வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது.

இதையொட்டி மாலை 5 மணிக்கு கடற்கரையில் அமைந்துள்ள பரசு ராம விநாயகா் கோவில் முன்பு பக்தா்கள் சங்கமித்தனர். தொடர்ந்து மாதா, பிதா, குரு வேண்டல், குலதேவதை, இஷ்ட தேவதை, கிராம தேவதை வேண்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் சப்த கன்னிகள் பூஜையை தொடர்ந்து 27 சுமங்கலிகள் அகல் தீபத்துடன் நெய்தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான சமுத்திர அபிஷேகமும், சமுத்திரத்தை நோக்கி ஆரத்தி வழிபாடும் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News