வழிபாடு
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் உகாதி விழா 2-ந்தேதி நடக்கிறது

Published On 2022-03-31 07:02 GMT   |   Update On 2022-03-31 07:02 GMT
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 2-ந் தேதி உகாதி விழாவையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு சுப்ரபாதத்தில் தாயாரை எழுந்தருளச் செய்து சஹஸ்ரநாம அர்ச்சனை, நித்யார்ச்சனை நடக்கிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 2-ந் தேதி உகாதி விழா நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு சுப்ரபாதத்தில் தாயாரை எழுந்தருளச் செய்து சஹஸ்ரநாம அர்ச்சனை, நித்யார்ச்சனை நடக்கிறது. மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஸ்ரீ கிருஷ்ணசுவாமி முக மண்டபத்தில் உற்சவருக்கு அபிஷேகம் நடக்கிறது.

மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை புஷ்ப பல்லக்கில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். இரவு 8 மணி முதல் 8.30 மணி வரை பஞ்சாங்க சிரவணம், உகாதி ஆஸ்தானம் நடைபெறும். இதேபோல், ஸ்ரீ சூர்யநாராயண சுவாமி கோவிலில் உகாதியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக காலை 7 மணி முதல் 7.45 மணி வரை ஸ்ரீ சூர்யநாராயண சுவாமிக்கு அபிஷேகம், மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை ஆஸ்தானம் நடக்கிறது. இந்த நேரத்தில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News