ஆன்மிகம்
திருக்கோஷ்டியூர் நம்பி

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் நம்பிகள் அவதார திருநட்சத்திர நாள் விழா

Published On 2021-06-11 09:10 GMT   |   Update On 2021-06-11 09:10 GMT
திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் உள்ள திருக்கோஷ்டியூர் நம்பிக்கு சிறப்பு அபிஷேக, திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் நம்பிகள், மூலவர் பெருமாள் சன்னதியில் மங்களாசாசனம் நடைபெற்றது.
திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சுவாமி ராமானுஜரின் ஆசாரியனும், திருக்கோஷ்டியூர் ஸ்தல ஆச்சாரியரானவர் சுவாமி திருக்கோஷ்டியூர் நம்பிகள்.

இவரது அவதார திருநட்சத்திரமான வைகாசி மாத ரோகிணி நட்சத்திரம் நேற்று வந்ததால் திருக்கோஷ்டியூர் கோவிலில் உள்ள திருக்கோஷ்டியூர் நம்பிக்கு சிறப்பு அபிஷேக, திருமஞ்சனம் நடைபெற்றது.

பின்னர் நம்பிகள், மூலவர் பெருமாள் சன்னதியில் மங்களாசாசனம் நடைபெற்றது. அதன்பிறகு திருக்கோஷ்டியூர் நம்பிகள் சிறப்பு அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி கோவில் வளாகத்திற்குள் தென்னை மரத்து வீதி புறப்பாடும் நடந்தது.

கொரோனா விதிமுறை காரணமாக இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.
Tags:    

Similar News