செய்திகள்

மகனுடன் 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பழங்குடியின பெண்

Published On 2019-06-07 10:15 GMT   |   Update On 2019-06-07 10:15 GMT
திரிபுரா மாநிலத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தாயும் மகனும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
அம்பாசா:

திரிபுரா மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தலாய் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாமளி தேவி சக்மா. இவரது மகன் குணமோய் சக்மா. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தாயும் மகனும் இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். ஷியாமளி தேவி 500-க்கு 162 மதிப்பெண்களும், குணமோய் 414 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

குடும்ப சூழ்நிலை காரணமாக சிறு வயதில் படிப்பை பாதியில் நிறுத்திய ஷியாமளி தேவி, இப்போது தன் மகனுடன் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

வயதானாலும் விடா முயற்சியுடன் படித்து 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தாய்க்கு, கிழக்கு திரிபுரா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரேபதி பாராட்டு தெரிவித்துள்ளார். இது மற்றவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News