செய்திகள்
முககவசம்

கிருஷ்ணகிரியில் முககவசம் அணியாத 50 பேருக்கு அபராதம்

Published On 2021-04-05 10:23 GMT   |   Update On 2021-04-05 10:23 GMT
கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகனம், 4 சக்கர வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்த 50 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் 10 ஆயிரம் அபராதம் விதித்து, அதற்கான ரசீது வழங்கினர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கர், சீனிவாசன், கலைவேந்தன், இக்பால் பாஷா, வாஷீம்அகமத், சக்திவேல், மூர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான குழுவினர் தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, இருசக்கர வாகனம், 4 சக்கர வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்த 50 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் 10 ஆயிரம் அபராதம் விதித்து, அதற்கான ரசீது வழங்கினர். மேலும், வாகன ஓட்டிகளிடம் முககவசம் அணிவது குறித்தும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். வாகன ஓட்டிகளுக்கு முககவசங்களை சுகாதாரத்துறையினர் வழங்கினார்கள்.
Tags:    

Similar News