உள்ளூர் செய்திகள்
தூர்வாரும் பணிகள் ஆய்வு

வாய்க்கால்கள், ஆறுகளில் தூர்வாரும் பணிகள் மும்முரம்

Published On 2022-05-07 09:57 GMT   |   Update On 2022-05-07 10:02 GMT
நகை மாவட்டத்தில்க டைமடை பகுதியில் வாய்க்கால்கள், ஆறுகளில் தூர்வாரும் பணிகளை சிறு குறு தொழில் துறை செயலாளர் ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தமிழக அரசின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 80, கோடி ரூபாய் மதிப்பில் 4295 கிலோ மீட்டர் தூரமுள்ள ஆறு, வடிகால் மற்றும் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதைப்போல் டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலை அடுத்த பாப்பாகோயில் மற்றும் நரியங்குடி பகுதிகளில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் பொதுப்பணித்துறை சார்பில் பாசன வடிகால் வாய்க்கால்கள் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை சிறு, குறு தொழில்துறை செயலர் அருண்ராய் மற்றும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் பாசன வடிகால் வாய்க்காலில் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற சிறு, குறு தொழில்துறை செயலர் அருண்ராய் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் அணை திறப்பிற்குள் இப்பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் எனவும் அவர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News