ஆன்மிகம்
சிவன்

உத்திரம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்

Published On 2020-08-14 05:39 GMT   |   Update On 2020-08-14 05:39 GMT
காலடியில் பிறந்து தன் காலடியால் உலகை வலம் வந்து காமகோடி பீடத்தை ஆரம்பித்து வைத்ததோடு ஷண்மதஸ்தாபனத்தையும் வகுத்து அருளிய மகான், ஆதிசங்கரர். சிவனைத் துதித்து உத்திரம் நட்சத்திரக்காரர் உய்வடைய அவர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா.
தீனமான வாளி காம தேனவே நம:
சிவாய ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம:
சிவாய தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய

பொருள்: ஏழைகளுக்குக் காமதேனு எனும் தேவலோகத்துப் பசுவை போன்றவரும், புஷ்பங்களை அம்பாக உடைய மன்மதனை எரித்த அக்னியானவரும், தன்னுடைய பக்தர்களுக்கு மேருமலை போன்றவரும், அரக்கர் கூட்டமாகிய இருளுக்குப் பிரகாசமான கதிரவன் போன்றவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
Tags:    

Similar News