செய்திகள்
மழை

ஏற்காடு, ஆனைமடுவு பகுதிகளில் மழை

Published On 2021-07-16 08:48 GMT   |   Update On 2021-07-16 08:48 GMT
ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. பூங்காக்கள் திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சேலம், ஏற்காடு, ஆனைமடுவு பகுதிகளில் சாரல் மழையாக பெய்தது. இந்த மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

குறிப்பாக ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. பூங்காக்கள் திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது. இதனால் கடைகளில் வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 7 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. ஆனைமடுவு 3, மேட்டூர் 2.2, கரியகோவில், காடையாம்பட்டி, ஓமலூர், சேலத்தில் தலா 2 மி.மீ., எடப்பாடியில் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 21.20 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.

Tags:    

Similar News