உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி போக்குவரத்து போலீசார்

பண்ருட்டி 4 முனை சந்திப்பில் நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் அதிரடி

Published On 2022-01-12 11:25 GMT   |   Update On 2022-01-12 11:25 GMT
பண்ருட்டி சென்னை சாலை ரெயில்வே மேம்பாலம் அருகே இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு கூம்பு வடிவ கேன்கள் மற்றும் பேரிகாடுகள் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி சீரமைத்தார்.
பண்ருட்டி:

பண்ருட்டி சென்னை சாலையில் 4 முனை சந்திப்பு உள்ளது. 4 முனை சந்திப்பு அருகிலேயே ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை சாலை, கும்பகோணம் சாலை, ராஜாஜி சாலை, காந்தி சாலை, கடலூர் ரோடு ஆகிய 5 சாலைகள் இங்கு உள்ளது. இதுமட்டுமில்லாமல் ரெயில்வே மேம்பாலம் அருகில் 2 பக்கமும் 2 சப்-வேக்கள் உள்ளது. இதனால் இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது.

இந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலைகள் வழியாக தினமும் காலை, மாலை இருவேளையும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் சென்று வருகின்றனர்.

இது மட்டும் அல்லாமல் இந்தவழியாக முக்கிய ஊர் களுக்கு செல்லும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவ, மாணவிகள் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், வர்த்தகர்கள், வாகன ஓட்டிகள்,கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

பண்ருட்டி சென்னை சாலை ரெயில்வே மேம்பாலம் அருகே இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு கூம்பு வடிவ கேன்கள் மற்றும் பேரிகாடுகள் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி சீரமைத்தார்.

இதனை தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து போக்குவரத்து போலீசார் முக்கிய சாலையில் நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களை சாலையின் ஒரு பகுதியில் மட்டும் நிறுத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News