உள்ளூர் செய்திகள்
அமைச்சர் கீதாஜீவன் தாலிக்கு தங்கம் வழங்கிய காட்சி.

கோவில்பட்டியில் தாலிக்கு தங்கம் வழங்கிய அமைச்சர் கீதாஜீவன்

Published On 2022-01-15 08:03 GMT   |   Update On 2022-01-15 08:03 GMT
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கோவில்பட்டி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு தங்கம் வழங்கினார்.
கோவில்பட்டி:

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கோவில்பட்டி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆர்.டி.ஓ. சங்கர நாராயணன் தலைமை தாங்கினார். பயிற்சி கலெக்டர் சதீஷ்குமார், நகராட்சி ஆணையர் தென்காசி ராஜாராம், தாசில் தார் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கத்தை வழங்கி பேசிய தாவது:

மாவட்டத்தில் 3 ஆயி ரம் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூர, கோவில்பட்டி, விளாத்தி குளம், புதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 300 பயனாளிகளுக்கு திருமாங்கல்ய தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கப்படுகிறது.

அதில் கோவில்பட்டி நகராட்சியில் 40 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2018&ம் ஆண்டில் இருந்து நிலுவையில் இருந்த விண்ணப்பங்களில் 2019, ஆகஸ்ட் மாதம் வரை உள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட திருமாங் கல்ய தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோல, ஆதர வற்றோர், விதவை மகள் மற்றும் கலப்புத் திருமணத்திற்காக 2021 வரை பெறப்பட்ட விண்ணப் பங்கள் பரிசீலிக்கப்பட்டு, திருமாங்கல்ய தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கப்பட உள்ளது .

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News