உள்ளூர் செய்திகள்
வேலூரில் விவசாயிகளுக்கு மின் இணைப்புக்கான ஆணையை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர் ஆனந்த் எம்.பி வழங்கினர்.

வேலூர் மண்டலத்தில் 3,286 பேருக்கு இலவச மின் இணைப்பு

Published On 2022-04-17 09:36 GMT   |   Update On 2022-04-17 09:36 GMT
வேலூர் மண்டலத்தில் 3,286 பேருக்கு இலவச மின் இணைப்பு ஆணை வழங்கப்பட்டது.
வேலூர்:

தமிழகம் முழுவதும் விவசாயத்துக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2001 முதல் மின் இணைப்பு கோரி லட்சக்கணக்கான விவசாயிகள் பதிவு செய்து காத்திருந்தனர்.

 இதில் 2001 முதல் 2016-ம் ஆண்டு வரை பதிவு செய்து காத்திருக்கும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு ஓராண்டுக்குள் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 செப்டம்பர் 23-&ந்தேதி தொடங்கி வைத்தார்.

 இந்த ஓராண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு திட்டத்தின் கீழ் மின்வாரியத்தின் வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர் மாவட்டத்தில் 1,204 விவசாயிகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில், 2,082 விவசாயிகள் என மொத்தம் 3 ஆயிரத்து 286 விவசாயிகளுக்கு கடந்த மார்ச் 31-க்குள் இலவச மின் இணைப்பு வாங்கப்-பட்டுள்ளது.
 
இதன் மூலம் இந்த இரு மாவட்டங்களுக்கும் அளிக்கப்பட்டிருந்த இலக்கு நிறைவு செய்யப்-பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 ஓர் ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 2021-22-ம் ஆண்டில் விவசாய மின் இணைப்பு பெற்ற பயனாளிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி சனிக்கிழமை காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். 

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக் கழகம், குடியாத்தம், பள்ளிகொண்டா ஆகிய 3 இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வி.ஐ.டி. பல்கலைக்-கழகத்-தில் நடந்த நிகழ்ச்சியில் நூற்றுக்-கணக்கான விவசாயிகள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர். 

பின்னர் இலவச மின் இணைப்பு ஆணையை விவசாயிகளிடம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேலூர் டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி. ஆகியோர் வழங்கினர். 

இதில் கோட்டாட்சியர் பூங்கொடி, காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், மின் பகிர்மான கழக வேலூர் மண்டல தலைமை பொறியாளர் அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News