செய்திகள்
அஸ்வின்

முதல் செசன் மிக முக்கியமானது: அஸ்வின் சொல்கிறார்

Published On 2021-01-10 12:41 GMT   |   Update On 2021-01-10 12:41 GMT
சிட்னி டெஸ்டில் நாளைய போட்டியின் முதல் செசன் மிக முக்கியமானது என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சிட்னி டெஸ்டில் 407 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. ரோகித் சர்மா நம்பிக்கையுடன் விளையாடினார். ஆனால் 52 ரன்கள் எடுத்த நிலையில், புல் ஷாட் அடித்து பேட் கம்மின்ஸ் பந்தில் மாட்டிக்கொண்டார்.

4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா, ரஹானே களத்தில் உள்ளனர். கடைசி நாளில் 309 ரன்கள் தேவை.

இந்திய அணி வெற்றிபெற வேண்டுமென்றால் நாளைய முதல் செசன் மிகமிக முக்கியமானது என சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘நாளை முதல் செசனில் சிறப்பாக விளையாடுவது எங்களுக்கு முக்கியமானது. முதல் செசனில் விக்கெட் இழக்கக் கூடாது. களத்தில் இருக்கும் இருவரும் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கிரிக்கெட் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.

மெல்போர்னில் ரஹானே செஞ்சூரி அடித்தார். புஜாரா முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்’’ என்றார்.
Tags:    

Similar News