ஆட்டோமொபைல்
டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4

மோட்டார்சைக்கிள் யூனிட்களை திரும்ப பெறும் டுகாட்டி

Published On 2021-03-29 09:49 GMT   |   Update On 2021-03-29 09:49 GMT
மோட்டார்சைக்கிள்களில் என்ஜின் கோளாறு காரணமாக ரீகால் செய்யப்படுவதாக டுகாட்டி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.


டுகாட்டி நிறுவனம் தனது மல்டிஸ்டிராடா வி4 மோட்டார்சைக்கிளை அமெரக்காவில் ரீகால் செய்கிறது. வி4 மோட்டாரில் கோளாறு கண்டறியப்பட்டதே ரீகால் செய்வதற்கான காரணம் ஆகும். வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட 60 யூனிட்கள் ரீகால் செய்யப்படுகின்றன.



வி4 மோட்டாரின் வால்வ் கைடுகளில் உள்ள சிறு குறைபாடுகள் அதன் செயல்திறனை குறைத்து இறுதியில் செயலற்றதாக மாற்றிவிடும் என டுகாட்டி தெரிவித்து இருக்கிறது. உதிரிபாகங்களை வழங்கிய இரு நிறுவனங்கள் செய்த தவறால் இந்த கோளாறு ஏற்பட்டு இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களில் என்ஜின் மாற்றப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு திரும்ப வழங்கப்படும். என்ஜின் முழுமையாக மாற்றிக் கொடுக்கும் வரை புதிய மல்டிஸ்டிராடா வி4 விற்பனையை நிறுத்த டுகாட்டி உத்தரவிட்டு இருக்கிறது.
Tags:    

Similar News