செய்திகள்
விராட் கோலி

கடைசி ஓவரில் 24 ரன்கள்: பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி

Published On 2020-10-15 15:46 GMT   |   Update On 2020-10-15 15:46 GMT
கிறிஸ் மோரிஸ் கடைசி ஓவரில் அதிரடியாக விளையாட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி.
ஷார்ஜாவில் ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் அணிக்கெதிராக டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷார்ஜா மைதானம் மிக சிறியது என்பதால் தொடக்கத்தில் இருந்து அடித்து ஆடலாம் என நினைத்தனர். ஆனால் பஞ்சாப் முதல் ஓவரிலேயே சுழற்பந்தை பயன்படுத்தியது. இருந்தாலும் இருவரும் அதிரடியை தொடங்க ஆரம்பித்தனர்.

முதல் 4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி ஆர்சிபி 38 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார் இந்த ஓவரில் முதல் பந்தில் தேவ்தத் 12 பந்தில் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். பவர் பிளேயில் ஆர்சிபி 1 விக்கட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்திருந்தது.

7-வது ஓவரை முருகன் அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பிஞ்ச் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி முருகன் அஸ்வின், பிஷ்னோய் ஆகிய இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னரை மிடில் ஆர்டரில் பந்து வீச, ஆர்சிபி டி வில்லியர்ஸை களம் இறக்காமல் வாஷிங்டன் சுந்தர், ஷவம் டுபே ஆகியோரை களம் இறக்கியது.

11-வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷிவம் டுபே 23 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 2 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். விராட் கோலி அதே ஓவரில் 48 ரன்னில் வெறியேறினார்.

ஆர்சிபி 18 ஓவர் முடிவில் 137 ரன்களே எடுத்திருந்தது, 19-வது ஓவரில் 10 ரன்களும், கடைசி ஓவரில் 24 ரன்களும் என 12 பந்தில் 34 ரன்கள் அடிக்க ஆர்சிபி 20 ஓவரில் 171 ரன்கள் அடித்துள்ளது. கிறிஸ் மோரிஸ் 8 பந்தில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 25 ரன்கள் விளாசினார்.
Tags:    

Similar News