செய்திகள்
கோப்புபடம்.

27 சதவீத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு - அதிகாரி தகவல்

Published On 2021-09-17 09:45 GMT   |   Update On 2021-09-17 09:45 GMT
கர்ப்பம் தரித்தது முதல் குழந்தை பிறந்து தாய்ப்பால் கொடுக்கும் வரை பெண்கள் மிகுந்த ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம்.
திருப்பூர், செப்:

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு தொகுதியை சேர்ந்த 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மரகதம் வரவேற்றார். 

நிகழ்ச்சியை துவக்கிவைத்து எம்.எல்.ஏ., செல்வராஜ் பேசுகையில், பெண்களுக்கு பல சலுகைகள் வழங்கி இந்த அரசு பெண் சமுதாய வளர்ச்சிக்கு உதவுகிறது  என்றார்.

மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரதீப் வாசுதேவ கிருஷ்ணகுமார் பேசுகையில்,  நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 27 சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில் தான் மத்திய, மாநில அரசுகள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஊட்டச்சத்து உணவுவழங்குவதில் அக்கறை செலுத்துகின்றன. 

கர்ப்பம் தரித்தது முதல் குழந்தை பிறந்து தாய்ப்பால் கொடுக்கும் வரை பெண்கள் மிகுந்த ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் என்றார். கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்து சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News