சமையல்
கொள்ளுப்பொடி

எலும்புக்கும், நரம்புக்கும் வலிமை தரும் கொள்ளுப்பொடி

Published On 2022-02-03 04:03 GMT   |   Update On 2022-02-03 04:03 GMT
கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு, ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. மேலும் சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும்.
தேவையான பொருள்கள் :

கொள்ளு - 100 கிராம்
மிளகாய் வத்தல் - 6
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 10 பற்கள்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் கொள்ளு சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும். அதை தனியாக எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் மிளகாய் வத்தலை போடவும்.

மிளகாய் வத்தல் நன்கு வறுபட்டதும் பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி அதை தனியாக எடுத்து வைக்கவும்.

அடுப்பை அணைத்து விட்டு சூடாக இருக்கும் அதே கடாயில் கறிவேப்பிலையை போட்டு வறுத்துக் கொள்ளவும்.  

பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து சிறிது நேரம் ஆற விடவும்.

பூண்டை தோலுரித்து வைக்கவும்.

ஆறியவுடன் வறுத்த பொருட்கள் மற்றும் பூண்டு சேர்த்து மிக்ஸ்சியில் நன்றாக திரித்துக் கொள்ளவும்.

அதை ஒரு பேப்பரில் பரப்பி நன்கு ஆற விடவும். ஆறிய பின் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும்.

சுவையான கொள்ளுப்பொடி ரெடி.

இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
Tags:    

Similar News