தொழில்நுட்பம்
சாம்சங் தி ஃபிரேம் டி.வி.

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-08-07 05:16 GMT   |   Update On 2019-08-07 05:16 GMT
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.



சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. தி ஃபிரேம் ஸ்மார்ட் 7-இன்-1 32 இன்ச் ஹெச்.டி. மற்றும் 40 இன்ச் ஃபுல் ஹெச்.டி. எல்.இ.டி. டி.வி. என அழைக்கப்படுகின்றன.

இதில் சாம்சங் ஸ்மார்ட் 7-இன்-1 டி.வி.க்களில் ஆன்லைன் தரவுகளை பயன்படுத்தும் வகையில் இந்த காலத்து இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த டி.வி.க்கள் ப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ ஆன்லைன் வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருகிறது.

தி ஃபிரேம் 55-இன்ச் 4K ஹெச்.டி.ஆர். டி.வி. வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி ரூ. 4,999 விலையில் இருந்து வழங்கப்படுகிறது. இதன் விற்பனை ஆகஸ்ட் 12, 2019 இல் துவங்குகிறது. தி ஃபிரேம் 55- இன்ச் டி.வி. விலை ரூ. 1,19,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



32-இன்ச் ஸ்மார்ட் 7-இன்-1 டி.வி.யை வாங்குவோருக்கு ரூ. 999 முதல் வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. 40-இன்ச் சாம்சங் ஸ்மார்ட் 7-இன்-1 டி.வி.  அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் தளங்களில் ஆகஸ்ட் மாதத்தின் நான்காவது வாரம் முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 32-இன்ச் ஸ்மார்ட் 7-இன்-1 டி.வி. விலை ரூ. 22,500 என்றும் 40-இன்ச் மாடல் விலை ரூ. 33,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தி ஃபிரேம் டி.வி.யில் QLED தொழில்நுட்பம் மற்றும் இன்-பில்ட் மோஷன் மற்றும் பிரைட்னஸ் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. தி ஃபிரேம் டி.வி. பயன்படுத்தாத சமயத்தில் ஆர்ட் மோடிற்கு சென்று கலை சார்ந்த புகைப்படங்களை திரையில் காண்பிக்கும். இத்துடன் டி.வி. வைக்கப்பட்டுள்ள அறையின் சூழலுக்கு ஏற்ப ஸ்கிரீன் பிரைட்னஸ் தானாக மாறும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

இதன் குவாண்டம் டாட் தொழில்நுட்பம் மற்றும் ஹெச்.டி.ஆர். 10 உள்ளிட்டவை புகைப்படம் மற்றும் வீடியோக்களை மிக நேர்த்தியாக பிரதிபலிக்கின்றன. இதில் பிக்ஸ்மி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

தி ஃபிரேம் டி.வி. பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களுடன் வயர்லெஸ் முறையில் இணைந்து கொண்டு ஸ்மார்ட் திங்ஸ் செயலி மற்றும் ஒன் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்குகிறது. பில்ட்-இன் ஏர்பிளே 2 வசதியும் வழங்கப்பட்டு இருப்பதால் ஆப்பிள் சாதனங்களில் இருக்கும் தரவுகளையும் டி.வி.யில் பார்க்க முடியும்.
Tags:    

Similar News