உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

கரூர் அருகே பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் ரேசன் கடைகளில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

Published On 2022-01-12 09:24 GMT   |   Update On 2022-01-12 09:24 GMT
ரேஷன் கடையில் அமைச்சர் ஆய்வு
கரூர்:

தமிழகம் முழுவதும் அனைத்து ரேசன் கடைகளிலும் கரும்பு, வெல்லம் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு முறையாகவும், தரமாகவும் வழங்கப்படுகிறதா என தாந்தோணிமலை ரேஷன் கடையில் மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ரேஷன் கடையில் ஆய்வு செய்தார்.

முன்னதாக கடந்த 4 ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் 593 ரேஷன் கடைகள் மூலம் 3,25,898 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.17.53 கோடியில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கத் தொடங்கி 1 வாரமான நிலையில் தாந்தோணிமலை ரேஷன் கடையில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பொருட்கள் முறையாகவும், தரமாகவும் விநியோகம் செய்யப்படுகிறதா? என பார்வையிட்டு ஆய்வு செய்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News