செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 208 குறைந்தது

Published On 2021-03-04 05:38 GMT   |   Update On 2021-03-04 09:21 GMT
சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.33 ஆயிரத்து 904-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.26 குறைந்து ரூ.4,238 ஆக உள்ளது.
சென்னை:

தங்கம் விலையில் கடந்த சில வாரங்களாக ஏற்ற-தாழ்வு காணப்பட்டு வந்த நிலையில் 23-ந்தேதி முதல் விலை குறைந்து வந்தது. இதனால் தங்கம் பவுன் மீண்டும் ரூ.35 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது. தொடர்ந்து விலை குறைந்தபடியே இருந்தது.

நேற்று பவுனுக்கு ரூ.176 குறைந்து ரூ.34 ஆயிரத்து 112-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4,264 ஆக இருந்தது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்தது. இதனால் தங்கம் பவுன் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது. சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.208 குறைந்து ரூ.33 ஆயிரத்து 904-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.26 குறைந்து ரூ.4,238 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.71 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.60-க்கு விற்கிறது.
Tags:    

Similar News