செய்திகள்
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 போட்டி மும்பையில் இருந்து மாற்றம்

Published On 2019-11-27 13:23 GMT   |   Update On 2019-11-27 13:23 GMT
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் இருந்து ஐதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் ஆட்டம் டிசம்பர் 6-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுவதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் போட்டிக்கு பாதுகாப்பு வழங்க இயலாது என அம்மாநில போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் 6-ந்தேதி வான்கடே மைதானத்தில் நடைபெற இருந்த ஆட்டம் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. டிசம்பர் 11-ந்தேதி நடைபெற இருக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி மும்பை வான்கடே மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
Tags:    

Similar News