ஆன்மிகம்
திருவண்ணாமலையில் பாதுகாப்பற்ற நிலையில் தேர்கள்

திருவண்ணாமலையில் பாதுகாப்பற்ற நிலையில் தேர்கள்

Published On 2021-11-01 08:17 GMT   |   Update On 2021-11-01 08:17 GMT
அருணாசலேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள மாட வீதியில் அருணாசலேஸ்வரர், விநாயகர், முருகர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமி தேர்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா முக்கிய விழாவாகும்.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 7-ம் நாள் விழாவான 16-ந் தேதியன்று தேரோட்டமும், 10-ம் நாள் விழாவான 19-ந் தேதியன்று பரணிதீபம், மகாதீபம் ஏற்றப்படும்.

அருணாசலேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள மாட வீதியில் அருணாசலேஸ்வரர், விநாயகர், முருகர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமி தேர்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்த தேர்கள் தகர கொட்டகை மற்றும் பைபர் சீட்களால் ஆன கெட்டகையால் மூடப்பட்டு இருக்கும். தீபத்திருவிழாவை முன்னிட்டு தேர்களை புனரமைப்பு செய்வதற்காக கொட்டகைகள் அகற்றப்பட்டு உள்ளது. இந்த ஆண்டும் தீபத்திருவிழா கடந்த ஆண்டை போல கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா தொற்று குறையும் பட்சத்தில் திருவிழா நடத்த முதல்-அமைச்சர் அனுமதி அளிப்பார் என கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அதனால் இந்த ஆண்டு தீபத்திருவிழா எப்படி நடைபெற உள்ளது என்று கேள்விக்குறியாக உள்ளது.

கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் மழை பெய்து வருகிறது. தேர்களை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த கொட்டகைகள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் மரத் தேர்கள் மழையில் நனைந்தபடி உள்ளது. எனவே, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தேர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News