ஆன்மிகம்
நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை போக்கும் செயல்கள்

நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை போக்கும் செயல்கள்

Published On 2019-08-27 06:26 GMT   |   Update On 2019-08-27 06:26 GMT
கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்கள் பொதுவானவை. ஒரு முறை செய்யும் பரிகாரம் அல்ல. வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. புரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்.
1. படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்கிர தோஷம் படிப்படியாக குறையும்.

2. அடிக்கடி பசுவிற்கு வாழைப்பழம், கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும்.

3. வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய பணம், பொருள் கொடுத்து உதவி செய்தால் சனியின் ஆசிகளை கொடுத்து ஆயுளை விருத்தி செய்யும்.

4. ஆசான், வேதம் படித்தவர், நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது, குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது, குருவின் ஆசிகள் கிடைக்கும்.

5. சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும், கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது, தொழு நோய் / குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும்.

6. திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல், நம் வாழும் மனை, தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல், மேலும் பூமிக்கு மரியாதை செய்தல், பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு, பறவைகள்), உயிர் பலிகளை நாம் தவிர்த்தல், இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகங்களையும் தரும்.

7. ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல், புதன்கிழமை தோறும் அன்னதானம் செய்தல், புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை, பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி) நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில், மென்மையான வாழ்க்கையை கொடுக்கும்.

8. பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது, பிரதோஷ நாளில் சிவஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது, வெல்லத்துடன் பச்சரிசி தூளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும், இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள்.

இவைகள் பொதுவானவை ஒரு முறை செய்யும் பரிகாரம் அல்ல. வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. புரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்.
Tags:    

Similar News