செய்திகள்
இந்தியா எங்கே இருக்கிறது? கூகுளில் தேடிய அமெரிக்கர்கள்

இந்தியா எங்கே இருக்கிறது? கூகுளில் தேடிய அமெரிக்கர்கள்

Published On 2020-02-27 02:36 GMT   |   Update On 2020-02-27 02:37 GMT
டிரம்ப் இந்திய பயணத்தின்போது, அமெரிக்கர்களும், இந்தியர்களும் கூகுளில் என்னென்ன விஷயங்களை தேடியுள்ளார்கள் என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
புதுடெல்லி :

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்திருந்தார். அவரது பயணத்தின்போது, அமெரிக்கர்களும், இந்தியர்களும் கூகுளில் என்னென்ன விஷயங்களை தேடியுள்ளார்கள் என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்கர்கள் பலரும் கூகுளில், இந்தியா என்றால் என்ன? இந்தியா எங்கே இருக்கிறது? என்று தேடியுள்ளார்கள். கூகுளின் டிரெண்ட் மூலம் தெரியவந்திருக்கும் தகவல் என்னவென்றால், ஏராளமான அமெரிக்கர்கள் இந்தியா எங்கே இருக்கிறது? என்று தேடியிருக்கிறார்கள் என்பதே. அதேபோல, ஆச்சரியப்படுத்தும் வகையில் இந்தியா என்றால் என்ன? என்ற வார்த்தையும் அதிகளவில் தேடப்பட்டுள்ளது.

அதே சமயம், டிரம்ப் வருகையின்போது இந்தியாவில் இருந்து அதிகமாக தேடப்பட்ட வார்த்தை என்னவென்றால், டிரம்ப் தங்கியிருந்த ஐ.டி.சி. மவுரியா ஓட்டல் பற்றித்தான் ஏராளமான இந்தியர்கள் தேடியுள்ளனர். அடுத்த இடத்தில், ‘டிரம்ப் பாகுபலி’ என்றும் தேடப்பட்டுள்ளது.

டிரம்ப் வருகையின்போது பாகுபலி போல டிரம்பை சித்தரித்து ஒரு வீடியோ வெளியானது. பிறகு அது நீக்கப்பட்டது. அந்த வீடியோவைத்தான் இந்தியர்கள் பலரும் தேடியுள்ளனர். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் டிரம்பின் குடும்பம், அவரது மகள் இவாங்காவின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
Tags:    

Similar News