வழிபாடு
சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அம்மன் கோவிலில் கம்பம் சாட்டு விழா

சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அம்மன் கோவிலில் கம்பம் சாட்டு விழா

Published On 2022-03-17 07:31 GMT   |   Update On 2022-03-17 07:31 GMT
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் கம்பம் சாட்டும் (குழி கம்பம்) நிகழ்ச்சியில் குழியில் போடப்பட்ட வேம்பு மற்றும் ஊஞ்சல் மரக்குச்சிகுச்சிகள் பற்றி எரிந்ததில் ஆள் உயரத்துக்கு தீ ஜூவாலை எழுந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 8-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் கோவில் முன்பு 5 அடி ஆழத்துக்கு 15 அடி விட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த குழியில் பூசாரி மற்றும் பக்தர்கள் தாங்கள் கையில் கொண்டு வந்த வேம்பு மற்றும் ஊஞ்சல் மரக்குச்சிகளை போட்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் கம்பம் சாட்டும் (குழி கம்பம்) நிகழ்ச்சி தொடங்கியது. இதில் குழியில் போடப்பட்ட வேம்பு மற்றும் ஊஞ்சல் மரக்குச்சியில் கற்பூரம் ஏற்றி நெருப்பு பற்ற வைக்கப்பட்டது. இதனால் குழி கம்பத்தில் போடப்பட்ட குச்சிகள் பற்றி எரிந்ததில் ஆள் உயரத்துக்கு தீ ஜூவாலை எழுந்தது.

இதை கண்டதும் அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘அம்மா தாயே, பண்ணாரி தாயே’ என பக்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் பீனாட்சி வாத்திய இசைக்கு ஏற்ப மலைவாழ் மக்கள் மற்றும் பக்தர்கள் குண்டத்தை சுற்றி நடனமாடி வந்தனர்.

Tags:    

Similar News