லைஃப்ஸ்டைல்
நாடி சுத்தி

நுரையீரலில் உள்ள அசுத்த காற்றை வெளியேற்றும் எளிய நாடி சுத்தி

Published On 2021-10-21 02:50 GMT   |   Update On 2021-10-21 02:50 GMT
நமது இந்திய நாட்டில் உருவான யோகக்கலை நம்மிடம் இருக்கும் பொழுது நாம் ஏன் பயப்பட வேண்டும். அரசும் இக்கலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
விரிப்பில் சுகாசனத்தில் நிமிர்ந்து அமரவும், முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இடது கையை சின் முத்திரையில் வைக்கவும். வலது கை கட்டை விரலால் வலது நாசியை மூடி இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். மீண்டும் இடது பக்கம் இழுத்து இடது பக்கம் வெளிவிடவும். இதே போல் பத்து முறைகள் செய்யவும்.

பின் மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலது நாசியில் மெதுவாக மூச்சை இழுத்து வலது நாசியிலேயே மூச்சை வெளிவிடவும். இதே போல் பத்து முறைகள் செய்யவும்.

பின் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை வெளிவிடவும். இதே போல் பத்து முறைகள் செய்யவும். இந்த நாடிசுத்தி நுரையீரலில் உள்ள அசுத்த காற்றுகள் அனைத்தையும் வெளியேற்றிவிடும். நல்ல பிராண காற்றை மீண்டும் நுரையீரல் உள் வாங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.

மாணவர்கள் பள்ளி செல்லும்பொழுது முக கவசம் அணிய வேண்டி உள்ளது. அதனால் நுரையீரலின் இயக்கம் சற்று பாதிக்கப்படும். எனவே மாணவர்கள், ஆசிரியர்கள் வீட்டிற்கு வந்தவுடன், முகக்கவசத்தை எடுத்துவிட்டு, குளித்துவிட்டு இந்த மூச்சுப் பயிற்சியை பத்து நிமிடங்கள் செய்தால் நுரையீரலில் உள்ள காற்று முடிச்சுகளில் உள்ள அசுத்தக் காற்று வெளியேறும்.

மீண்டும் நுரையீரல் சுத்தமான பிராண காற்றை உள் வாங்கி உடல், மன இயக்கத்தை சரி செய்யும். ஒவ்வொரு பெற்றோரும், உங்கள் குழந்தைகளுக்கு மேலே குறிப்பிட்ட யோகக் கலைகளை தினமும் பயில செய்யுங்கள், நவம்பர் மாதம் பள்ளி செல்லும் பொழுது உங்கள் குழந்தை நோய் எதிர்பாற்றலுடன் செல்வார்கள். எந்த வைரஸ்சும் தாக்காது.

நமது இந்திய நாட்டில் உருவான யோகக்கலை நம்மிடம் இருக்கும் பொழுது நாம் ஏன் பயப்பட வேண்டும். அரசும் இக்கலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு இல்லங்களாக கொரோனா வராமல் தடுக்கும் அற்புத மருந்து யோகா, முத்திரை, மூச்சு பயிற்சி என்பதை விளக்கி பயில செய்ய வேண்டும்.

யோகக் கலைமாமணி
பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
6369940440
Tags:    

Similar News