செய்திகள்
கமல்ஹாசன்

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு - காமராஜர், எம்.ஜி.ஆர் திட்டங்களை தவிடுபொடியாக்கும்: கமல்ஹாசன்

Published On 2019-09-16 05:03 GMT   |   Update On 2019-09-16 05:03 GMT
படிக்க விருப்பம் இல்லாத மாணவர்களை ஈர்த்து படிக்க வைக்க காமராஜர், எம்.ஜி.ஆர் திட்டம் வகுத்தனர். அந்த முயற்சிகளை எல்லாம் தவிடுபொடியாக்கும் புதிய திட்டங்கள் வரக்கூடாது என்று கமல்ஹாசன் கூறினார்
சென்னை:

தமிழக அரசு 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்புகள் தோன்றி உள்ளன.

இதுபற்றி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது கருத்தை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

உலகம் எங்கும் பல நாடுகள் தேர்வு முறையை நீக்கி வருகின்றன. இப்போது ஒரு கணக்கெடுப்பைப் பார்த்தோம் என்றால், பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாமல் கல்வி தடைப்பட்டு வேறு வேலைகளுக்குப் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதனால் தான் இதனை பேசுகிறேன்.



நான் அரசியல் பேசவில்லை. இது நம் குழந்தைகளின் வாழ்வாதாரம். படிக்க விருப்பம் இல்லாத மாணவர்களை ஈர்த்து படிக்க வைக்க காமராஜர், எம்.ஜி.ஆர் திட்டம் வகுத்தனர். அந்த முயற்சிகளை எல்லாம் தவிடுபொடியாக்கும் புதிய திட்டங்கள் வரக்கூடாது’.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News