செய்திகள்
அபராதம்

ஓச்சேரியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம்

Published On 2020-09-22 11:04 GMT   |   Update On 2020-09-22 11:04 GMT
ஓச்சேரியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
காவேரிப்பாக்கம்:

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுஇடங்கள், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் முகக் கவசம் அணியாமல் சென்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வருவாய், சுகாதாரம், போலீஸ் துறையினரும், பேரூராட்சி நிர்வாகத்தினரும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு, பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து நேற்று ஓச்சேரி பஸ் நிறுத்தம் அருகில் வருவாய் ஆய்வாளர் தியாகராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் சவுந்தரராஜன், பாலாஜி, சுவேதா ஆகியோர் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருசக்கர வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் சென்ற 10 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கி அனுப்பினர்.
Tags:    

Similar News