செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

ஐதராபாத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் பகீர் வீடியோ

Published On 2021-01-21 05:27 GMT   |   Update On 2021-01-21 05:27 GMT
தீப்பிடித்து எரியும் வாகனம் ஒன்றின் வீடியோ ஐதராபாத்தில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் பகீர் வீடியோ பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


மேம்பாலம் ஒன்றின் மேல் தீப்பிடித்து எரியும் வாகனம் ஒன்றின் வீடியோ ஐதராபாத்தில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளில் தீப்பிடித்து எரிவது எண்ணெய் லாரி என்றும் இந்த சம்பவம் ஐதராபாத் நகரின் கச்சிபவுலி மேம்பாலத்தில் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது பூனேவில் உள்ள வார்ஜெ மேம்பாலத்தில் நடைபெற்றது. இந்த சம்பவம் ஒரு மாதத்திற்கு முன் நடைபெற்றது. உண்மையில் தீப்பிடித்து எரிந்தது எண்ணெய் லாரி இல்லை என்பதும் இது ஓடும் போது தீப்பிடித்து எரியவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த விபத்தின் போது தீப்பிடித்து எரிந்த லாரியின் ஓட்டுனர் வாகனத்தில் இருந்து குதித்து தப்பிவிட்டார். இந்த வீடியோ டிசம்பர் 2020 முதல் வாரத்தில் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வீடியோ தலைப்பில் இந்த சம்பவம் பூனேவில் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் வாகனம் மேம்பாலத்தில் தீப்பிடித்து எரியும் காட்சி அடங்கிய வீடியோ ஐதராபாத்தில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News