லைஃப்ஸ்டைல்
கொரோனா மன அழுத்தத்தை குழந்தைகள் சமாளிக்கட்டும்

கொரோனா மன அழுத்தத்தை குழந்தைகள் சமாளிக்கட்டும்

Published On 2021-04-21 04:26 GMT   |   Update On 2021-04-21 04:26 GMT
பெரும்பாலான பெற்றோர்கள் வைரஸ் தொற்று பரவலில் இருந்து குடும்பத்தை பாதுகாக்கும் முயற்சிகளிலே அதிகம் ஈடுபடுவதால், குழந்தைகளின் உணர்ச்சிகளை புரிந்துகொள்வதில் போதுமான அக்கறை செலுத்துவதில்லை.
கொரோனா வைரஸ் பரவல் பீதியில் இருந்து மக்கள் ஓரளவு இயல்புக்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையில், இரண்டாவது அலை வீசத்தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே பல மாதங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த குழந்தைகள் மீண்டும் மனச்சோர்வுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பெரும்பாலான பெற்றோர்கள் வைரஸ் தொற்று பரவலில் இருந்து குடும்பத்தை பாதுகாக்கும் முயற்சிகளிலே அதிகம் ஈடுபடுவதால், குழந்தைகளின் உணர்ச்சிகளை புரிந்துகொள்வதில் போதுமான அக்கறை செலுத்துவதில்லை.

இந்த நோய்த்தொற்று காலம் குழந்தைகளின் வளர்ச்சி, கற்றல், விளையாட்டு, நடத்தை, தகவல் தொடர்பு, உணர்வுகளை வெளிப் படுத்துதல் போன்றவைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி யிருக்கிறது. பெரும்பாலான குழந்தைகள் தொடர்ச்சியாக பள்ளி களுக்கு சென்று தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப விரும்புகிறார்கள். தங்கள் நண்பர்களை சந்திக்கும் ஆவலும் அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது.

வாழ்க்கை முறை மாற்றத்தால் உருவான மனஅழுத்தம் குழந்தை களின் நடத்தையில் பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கியிருக்கிறது. அதில் இருந்து குழந்தைகளை மீட்பதற்கு மேற்கொள்ளவேண்டியவை:

* குழந்தைகளிடையே நிலவும் கொரோனா பற்றிய அச்சத்தை தீர்க்க பெற்றோர் முயற்சிக்கவேண்டும். அதனை பற்றி தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் பெற்றோர் குழந்தைகளிடம் பேச வேண்டும். அதன் மூலம் அவர்களின் கவலை மற்றும் மன சோர்வுக்கு தீர்வு காணலாம். தாத்தா, பாட்டியுடன் வழக்கத்தைவிட அதிக நேரம் செலவிட வைக்கலாம். அப்போது முககவசமும், பாதுகாப்பு உணர்வும் மிக முக்கியம்.

* வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் குழந்தைகளை அவர் களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதற்கு அனுமதிக்கலாம். வீடு குப்பையாகிவிடுமே என்று கவலைப்படாமல் அவர்களை மகிழ்ச்சியாக செயல்படவிடுங்கள். அதன்பிறகு அவர் களை கொண்டே வீட்டை சுத்தமாக்குங்கள். வீட்டு வேலைகளை சரியாக செய்தால் பரிசுகொடுத்து அவர்களை பாராட்டுங்கள். சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றுவதற்கும், சமூக பொறுப்புகளை புரிந்துகொள்வதற்கும் வழிகாட்டலாம்.

* உள்அறை விளையாட்டு மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்தலாம். குடும்ப உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து குழந்தைகளுக்கு பிடித்தமான எளிய விளையாட்டுகளை விளையாடலாம்.

* பெற்றோரின் மேற் பார்வையில் டிஜிட்டல் தளங்கள் வழியாக நண்பர்கள் மற்றும் வகுப்பு தோழர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கு ஊக்குவிக்கலாம். ஆன்லைன் வழியாக வாரம் ஒருமுறை நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பது அவர்களது மனதுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

* குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் ‘கொரோனா பாதிப்பாக இருக்குமோ?’ என்று பீதி அடையாதீர்கள். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது இயல்பானதுதான். அதனால் கொரோனாவாக இருக்குமோ என்று பயப்பட வேண்டியதில்லை. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக்கூடிய தைமஸ் என்னும் சுரப்பி குழந்தைகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும். கொரோனா வைரஸ் குழந்தை களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாததற்கு தைமஸ் சுரப்பியும் ஒருவகையில் காரணம்.

* 18 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 8.5 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வழிமுறைகளை பின்பற்றுவதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்துங்கள். ஏனெனில் கொரோனா பற்றிய சரியான புரிதல் குழந்தைகளிடம் இல்லாதபட்சத்தில் அவர்களின் மன நலம் வெகுவாக பாதிப்புக்குள்ளாகிவிடும்.
Tags:    

Similar News