செய்திகள்
பர்கினா பாசோ ராணுவ வீரர்கள்

திடீர் தாக்குதல்- பர்கினா பாசோவில் 29 பேரை கொன்று குவித்த பயங்கரவாதிகள்

Published On 2019-09-09 08:18 GMT   |   Update On 2019-09-09 08:18 GMT
பர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல்களில் 29 பேர் உயிரிழந்தனர்.
வாகடூகு:

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்கினோ பாசோவில் இயங்கி வரும் பயங்கரவாத குழுக்களால் நாட்டின் பாதுகாப்புக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் மீது பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் வடக்கு பகுதியில் இரண்டு இடங்களில் நேற்று பயங்கரவாத குழுவினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். ஒரு இடத்தல் காரில் வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்துள்ளனர். அதில், 15 பேர் உயிரிழந்தனர். மற்றொரு இடத்தில் உணவுப் பொருட்களை சைக்கிள்களில் ஏற்றிச் சென்ற மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்துக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என அரசு கூறியுள்ளது.
Tags:    

Similar News