செய்திகள்
கோப்பு படம்

தமிழகத்தில் இன்று 574 பேருக்கு கொரோனா - 8 பேர் பலி

Published On 2021-01-22 16:04 GMT   |   Update On 2021-01-22 16:04 GMT
தமிழகத்தில் இன்று 574 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 574 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 33 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பரவியவர்களில் இன்று 689 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 16 ஆயிரத்து 205 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 307 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News