ஆன்மிகம்
ஆரல்வாய்மொழி நாராயண சுவாமி

ஆரல்வாய்மொழி நாராயண சுவாமி நிழல் தாங்கலில் திருவிழா நாளை தொடக்கம்

Published On 2021-03-04 04:46 GMT   |   Update On 2021-03-04 04:46 GMT
ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம் நாராயணசுவாமி நிழல் தாங்கலில் அய்யாவின் 189-வது அவதார தின விழா மற்றும் வருடாந்திர திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம் நாராயணசுவாமி நிழல் தாங்கலில் அய்யாவின் 189-வது அவதார தின விழா மற்றும் வருடாந்திர திருவிழா நடக்கிறது. அவதார தின விழாவையொட்டி நேற்று இரவு 7 மணிக்கு அன்னதானம் நடந்தது.

வருடாந்திர திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 15-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினசரி காலை 5 மணிக்கும், இரவு 7 மணிக்கும் அய்யாவுக்கு பணிவிடையும், மாலை 4 மணி முதல் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு அன்னதர்மமும் நடக்கிறது.

12-ந் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண ஏடு வாசிப்பும், அதைத்தொடர்ந்து 8 மணிக்கு திருக்கல்யாண விருந்தும் நடைபெற உள்ளது.

14-ந்தேதி பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், 2 மணிக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு அய்யாவுக்கு பட்டாபிஷேகமும், 8 மணிக்கு அய்யா கருடவாகனத்தில் நையாண்டி மேளம், செண்டை மேளம், சிங்காரி மேளம் முழங்க பவனியும் நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது.15-ந்தேதி பகல் 12 மணிக்கு பார்ப்பானை வைத்து பணிவிடை நிகழ்ச்சியும், தொடர்ந்து 2 மணிக்கு அய்யா ஊர்வலமும், மாலை 4 மணிக்கு இனிப்பு வழங்குதலும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News