உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த்தை, தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சந்தித்து மனு கொடுத்தார்

விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்தை நிறுத்தாமல் இயக்க வேண்டும்

Published On 2022-01-12 10:24 GMT   |   Update On 2022-01-12 10:24 GMT
கன்னியாகுமரியில் விவேகானந்தர்மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்தை நிறுத்தாமல் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்தை கன்னியாகுமரி தங்கும் விடுதி உரிமையாளர் கள் சங்க பிரதிநிதிகளுடன், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக கன்னியாகுமரி விளங்கி வருகிறது. கனனியா குமரி கடலின் நடுவே அமைந் துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளு வர் சிலையை சுற்றுலா பயணிகள் படகுகளில் சென்று பார்வையிட்டு வரு கிறார்கள்.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு பல்வேறு தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. கடந்த  2020-ம் ஆண்டு கொரோனா வால் கன்னியாகுமரி பல்வேறு நிலையில் பாதிக்கப் பட்டது. அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் பூம்புகார் கழகம், படகு போக்குவரத்தை நிறுத்தாமல் இருக்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் போக்கு வரத்தை நிறுத்தினாலும், பிற நாட்களில் படகு போக்கு வரத்தை நிறுத்தாமல் இயக்க வேண்டும். படகு சேவையை நிறுத்தி விட்டால் சுற்றுலா பயணிகள் வருகை நின்று விடும். இதனால், தனியார் விடுதிகள், கடைகள், ஓட்டல் கள் இதனை நம்பி இருக்கும் வணிகர்கள், தொழிலாளர் கள் வாழ்வாதாரம் பாதிக்கப் படும்.

இதை கருத்தில் கொண்டு பூம்புகார் படகு போக்குவரத்து கழகம் படகு சேவையை தடைபடாமல் அரசு விதிகளுக்குட்பட்டு தொடர்ந்து இயக்க அனும திக்க வேண்டும்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.8 கோடியில் வாங்கப்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட 2 நவீன படகுகளையும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News