செய்திகள்
பிரதமர் மோடி

இயற்கையோடு இணைந்து வாழ இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும் -பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து

Published On 2021-01-14 04:13 GMT   |   Update On 2021-01-14 04:13 GMT
இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் பொங்கல் பண்டிகை நம்மைத் தூண்டட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பொங்கல் கொண்டாடும் மக்களுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  அதில், ‘தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள். தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது. நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக. இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும்’ என மோடி குறிப்பிட்டுள்ளார்.
 
அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று கூறி உள்ள காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, மதுரை ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க இன்று தமிழகம் வருகிறேன் என ட்வீட் செய்துள்ளார்.



சென்னை வந்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இன்று பொன்னியம்மன்மேடு ஸ்ரீ கடம்பாடி சின்னம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவிலும் கலந்துகொண்டு பூஜை செய்தார்.
Tags:    

Similar News