ஆட்டோமொபைல்
மஹிந்திரா எக்ஸ்யுவி300

இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யுவி300 புதிய வேரியண்ட் அறிமுகம்

Published On 2020-04-16 11:03 GMT   |   Update On 2020-04-16 11:03 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி300 புதிய வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எக்ஸ்யுவி300 காம்பேக்ட் எஸ்யுவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. பின் 2019 ஆண்டு இறுதியில் மஹிந்திரா எக்ஸ்யுவி300 பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டது. அந்த வரிசையில் மஹிந்திரா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவியை பிஎஸ்6 டீசல் என்ஜினுடன் அப்டேட் செய்துள்ளது.

புதிய பிஎஸ்6 டீசல் மாடல்களின் விலை பிஎஸ்4 மாடலை போன்றே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காரில் என்ஜின் தவிர தோற்றத்தில் வேறு எந்த அப்டேட்டும் செய்யப்படவில்லை. 



இந்திய சந்தையில் மஹிந்திரா பிஎஸ்6 டீசல் வேரியண்ட்களின் துவக்க விலை ரூ. 8.69 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யுவி 300 பிஎஸ்6 டீசல் மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 114.5 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. முந்தைய பிஎஸ்4 என்ஜின் 117 பி.ஹெச்.பி. மற்றும் 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

எக்ஸ்யுவி300 பிஎஸ்6 டீசல் மாடலில் சன்ரூஃப், ரெயின்-சென்சிங் வைப்பர்கள், குரூயிஸ் கண்ட்ரோல், 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப், கீலெஸ் என்ட்ரி மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News