செய்திகள்
பிரதமர் மோடி

பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய பிரதமருக்கு அனுமதி மறுப்பு

Published On 2019-09-18 15:01 GMT   |   Update On 2019-09-18 15:01 GMT
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாடு பயணத்துக்கு தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 21ம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரது வெளிநாட்டு பயணத்துக்காக பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்காக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பாகிஸ்தானிடம் அனுமதி கேட்டனர். 

இந்நிலையில், இந்திய பிரதமரின் வெளிநாட்டு பயணத்துக்கு தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது என வெளியுறவு துறை மந்திரி குரேஷி தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 26-ம் தேதி முதல் பாகிஸ்தான் தனது நாட்டு வான்வெளியை மூடி வைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News