செய்திகள்
கொள்முதல் செய்யப்பட்ட முருங்கைக்காய்கள்.

வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்திற்கு 7 டன் முருங்கைக்காய்கள் வரத்து

Published On 2021-09-20 10:21 GMT   |   Update On 2021-09-20 10:21 GMT
கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை வியாபாரிகள் கோவை, மதுரை, பெங்களூர், சென்னை, ஒட்டன்சத்திரம் போன்ற பெருநகரங்களில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவிலில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கை காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை 55 விவசாயிகள் 7 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் வெள்ளகோவில்,முத்தூர், மூலனூர், காங்கேயம் பகுதிகளை சேர்ந்த 15 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.10க்கும், ஒரு கிலோ மர முருங்கை ரூ.9க்கும், ஒரு கிலோ கரும்பு முருங்கை ரூ.15 க்கும் கொள்முதல் செய்தனர். 

நேற்று கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை வியாபாரிகள் கோவை, மதுரை, பெங்களூர், சென்னை, ஒட்டன்சத்திரம் போன்ற பெருநகரங்களில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News