செய்திகள்
தெலுங்கானா மழை

ஆந்திரா, தெலுங்கானாவில் பேய்மழை: நிலைமையை கேட்டறிந்தார் பிரதமர் மோடி

Published On 2020-10-14 16:12 GMT   |   Update On 2020-10-14 16:12 GMT
ஐதராபாத் மற்றும் தெலுங்கானாவில் பல பகுதிகளில் மிகமிக கனமழை பெய்து பேரழிவை ஏற்படுத்திய நிலையில் பிரதமர் நிலைமையை கேட்டறிந்தார்.
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நேற்று காலை வடக்கு ஆந்திர பிரதேச கடற்கரை ஒட்டி காகிநாடாவில் கரையை கடந்தது. இதனைத் தொடர்ந்து ஐதராபாத், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து. இதனால் சாலைகள், தெருக்களில் ஆற்று வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த பேய்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், விவசாய நிலங்களும் சேதமடைந்தனர். இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரிடம் டெலிபோன் மூலம் பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது நிலைமையை கேட்டறிந்த மோடி மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இக்கிறது என்று உறுதியளித்தார்.

அதேபோல் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தெலுங்கானா மாநில கவர்னர் மற்றும் முதலமைச்சரை தொடர்ந்து கொண்டு மழை வெள்ளம் குறித்து கேட்டறிந்தார்.
Tags:    

Similar News