செய்திகள்
அதிபர் வேட்பாளர் ஜோ பிடன்

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன்

Published On 2020-08-22 15:13 GMT   |   Update On 2020-08-22 15:13 GMT
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோ பிடன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் நவம்பம் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் டொனாடு டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். 

இந்நிலையில், அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜோ பிடன், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் உலக மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். எல்லா தடைகளையும் கடந்து புதிய தொடக்கமாக இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News