செய்திகள்
விபத்தில் சிக்கிய காரை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர்.

பாலத்தில் கார் மோதல்- சிறைத்துறை டி.ஐ.ஜி. உயிர் தப்பினார்

Published On 2021-06-11 02:58 GMT   |   Update On 2021-06-11 02:58 GMT
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த சிறிய பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டி.ஐ.ஜி. பழனி உள்பட 3 பேரும் அதிர்ஷ்டவமாக காயமின்றி உயிர் தப்பினர்.
திண்டிவனம்:

மதுரை சிறைத்துறை சரக டி.ஐ.ஜி.யாக இருப்பவர் பழனி. இவர் பணி நிமித்தமாக நேற்று மதியம் ஒரு காரில் மதுரையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டார். காரை மதுரையை சேர்ந்த வீரசேரன் என்பவர் ஓட்டினார். மேலும் இந்த காரில் பாதுகாவலர் ஒருவரும் இருந்தார். இந்த கார் மாலை 5.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-ஒரத்தி சாலை சந்திப்பில் திருவண்ணாமலை புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த சிறிய பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டி.ஐ.ஜி. பழனி உள்பட 3 பேரும் அதிர்ஷ்டவமாக காயமின்றி உயிர் தப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த ரோஷனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, டி.ஐ.ஜி. பழனியை மாற்று காரில் காஞ்சிபுரத்திற்கு அனுப்பி வைத்தனர்.


Tags:    

Similar News