இஸ்லாம்
வாகையடி பக்கீர் பாவா தர்கா

வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி விழாவில் பிறைக்கொடி ஏந்திய யானை ஊர்வலம் இன்று நடக்கிறது

Published On 2022-02-28 04:28 GMT   |   Update On 2022-02-28 04:28 GMT
வாகையடி பக்கீர் பாவா தர்கா கந்தூரி விழாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) நேர்ச்சை நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும், வருகிற 3-ந் தேதி நேர்ச்சை வழங்குதலும் நடக்கிறது.
திட்டுவிளை மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் அவுலியா தர்காவில் வருடாந்திர கந்தூரி பெருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல், நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

இன்று (திங்கட்கிழமை) பிறைக் கொடி ஏந்திய யானை ஊர்வலமும், தொடர்ந்து இஸ்லாமிய மார்க்க பேருரையும் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) நேர்ச்சை நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும், வருகிற 3-ந் தேதி நேர்ச்சை வழங்குதலும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தர்கா விழா கமிட்டியினர் மற்றும் திட்டுவிளை யு.எல்.எஸ்.எம்.டி. ஜமாத் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News