செய்திகள்
ஜல்லிகட்டு காளை படத்துடன் கூடிய டி-சர்ட்டுகள்

திருப்பூரில் ஜல்லிக்கட்டு காளை படத்துடன் டி-சர்ட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்

Published On 2020-01-13 11:02 GMT   |   Update On 2020-01-13 11:02 GMT
பொங்கல் பண்டிகையையொட்டி திருப்பூரில் ஜல்லிக்கட்டு காளை படத்துடன் டி-சர்ட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர்:

தமிழர் பண்டிகைகளில் முக்கிய பண்டிகையாக பொங்கல் பண்டிகை இருந்து வருகிறது.

இந்த பண்டிகையை தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகையை யொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகள் நடைபெறும் பகுதிகளில் மொத்தம் குழுவாக பலர் இணைந்து ஜல்லிக்கட்டு காளைகள் படத்துடன் கூடிய, டி-சர்ட்டுகள் அணிவார்கள்.

மேலும், இந்த டி-சர்ட்டின் பின்புறம் அவர்களது பகுதி மற்றும் அணியின் பெயர் போன்றவற்றையும் அச்சிட்டு டி-சர்டுகள் தயாரிக்க திருப்பூரில் ஆர்டர்கள் கொடுப்பார்கள். அதன்படி டி-சர்ட்டுகள் தயாரித்து வழங்கப்படும்.ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை கவரும் வகையில் ஜல்லிக்கட்டு காளை படத்துடன் கூடிய டி-சர்ட்டுகள் தயாரித்து அனுப்பும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இது குறித்து உள்நாட்டு ஆடை தயாரிப்பாளர்கள் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகையையொட்டி பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக பலர் காளை படங்களுடன் கூடிய டி-சர்ட்டுகளுக்கு ஆர்டர்கள் கொடுப்பார்கள். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருந்தே ஆர்டர்கள் வந்து கொண்டிருந்தது. அதன்படி டி-சர்ட்டுகள் தயார் செய்து கொடுத்து வந்தோம்.

தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பலரும் தயாராகி வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு டி-சர்டுகள் அனுப்பும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. .

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News