வழிபாடு
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் தூக்கக்காரர்களின் நமஸ்காரம்

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் தூக்கக்காரர்களின் நமஸ்காரம்

Published On 2022-03-31 06:54 GMT   |   Update On 2022-03-31 06:54 GMT
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வரும் 1,127 தூக்கக்காரர்கள் கும்பிடு நமஸ்காரம் செய்தனர்.
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் தூக்கத்திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு வரலாற்று சிறப்பு மிக்க தூக்க நேர்ச்சை வருகிற 4-ந் தேதி நடக்கிறது. இதற்கான பெயர் பதிவு கோவில் வளாகத்தில் நடைபெற்றது. அதன்படி, நேர்ச்சை நிறைவேற்ற இந்த ஆண்டு 1098 பச்சிளம் குழந்தைகளின் பெயர் பதிவு செய்யப்பட்டது. தூக்கத் தேரானது 282 முறை கோவிலை சுற்றி வலம் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

குலுக்கலில் தேர்வான தூக்கக்காரர்கள் தூக்க நேர்ச்சை நடைபெறும் 4-ந் தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் கோவிலில் தங்கி இருந்து விரதம் அனுஷ்டிப்பார்கள்.

கோவில் வளாகத்தில் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வரும் 1,127 தூக்கக்காரர்கள் நேற்று மாலை நீராடிவிட்டு கோவில்வளாகத்தை சுற்றி நீண்ட வரிசையாக நின்று நமஸ்காரம் செய்யும் நிகழ்வு நடந்தது.
Tags:    

Similar News